ரஜினிக்கு விமானம், பார்த்திபனுக்கு ரயில்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படம் ரிலீசாகும்போது இந்திய திரையுலகிலேயே விமானத்தில் விளம்பரம் செய்யப்பட்ட முதல் படம் என்ற பெருமையை பெற்றது. ஏர் ஆசியா விமானத்தில் ரஜினியின் அட்டகாசமான போஸ்டர் உலகெங்கும் பரவியது. இதனையடுத்து அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது

இந்த நிலையில் ரஜினியை அடுத்து பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் ‘ஒத்த செருப்பு’ திரைப்படத்தை ரயிலில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல்முறையாக ரயிலில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாக பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

ஒத்த செருப்பு 7’, ஏகப்பட்ட டிரெயினிங் எடுக்க வேண்டியதா இருக்கு இப்படி விளம்பரிக்க! சங்கர் படம் போல., மயிலைப் போல ரயிலுக்கும் பெயிண்ட் அடித்து. இந்தியாவில் இதுவே முதல் முறை’ என்று குறிப்பிட்டுள்ளார். பார்த்திபனின் இந்த விளம்பரத்திற்கு பலன் கிடைக்குமா? என்பதை இந்த படம் வெளியாகும் செப்டம்பர் 20 வரை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply