ரஜினிக்கு ஒரு நியாயம்? விஜய்க்கு ஒரு நியாயமா? ‘தலைவர் 168’ பட தயாரிப்பாளரின் தம்பி ஆவேசம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தலைவர் 168’ படத்தின் தயாரிப்பாளரும் சன் நெட்வொர்க்ஸ் அதிபருமான கலாநிதி மாறனின் சகோதரர் தயாநிதி மாறன் இன்று மக்களவையில் ஆவேசமாக பேசியதாவது:

வருமான வரித்துறை விவகாரத்தில் நடிகர் ரஜினிக்கு ஒரு நீதி, நடிகர் விஜய்க்கு ஒரு நீதியா? படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகர் விஜய் விசாரணைக்காக வற்புறுத்தி அழைத்து செல்லப்பட்டது ஏன்?

ரஜினிக்குக் கிடைத்த வரிச்சலுகை நடிகர் விஜய்க்கு கிடையாதா?, தமிழகத்தில் தேர்தல் வருவதால் ரஜினிக்கு வரிச்சலுகை அளித்துள்ள வருமான வரித்துறை விஜய்யை மட்டும் மிரட்டும் வகையில் செயல்படுவது ஏன்? என்று பேசியுள்ளார்.

Leave a Reply