shadow

ரகுராம்ராஜனுக்கு பொருளாதாரா நோபல் பரிசா?

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம்ராஜனுக்கு இந்த ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாகவே ஒவ்வொரு துறையாக நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் நாளை பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை வென்றவர் யார் என்பது குறித்த அறிவிப்பை நோபல் பரிசு குழுவினர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கவுள்ளனர்.

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுக்கு ஆறு பேர் தற்போது போட்டியில் உள்ளனர். அவர்களில் ரகுராம் ராஜனும் ஒருவர் என்றாலும் அவருக்கு இந்த பரிசு கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்தவர் என்பதும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அரசால் ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்கப்பட்டவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 4–ந் தேதி ஓய்வு பெற்றார்.

Leave a Reply