யாரை ஏமாற்ற இந்த அறிவிப்பு? நீட் தேர்வு குறித்து மு.க.ஸ்டாலின் ஆவேச கருத்து

நீட் தேர்வு குறித்து அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது:

நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க அ.தி.மு.க அரசு வலியுறுத்துமாம். என்ன அநியாயம் இது? சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாக்களுக்கு ஒப்புதல் பெற்றுத்தர முடியாமல், மருத்துவராகும் கனவோடிருந்த மாணவர்களை பழிவாங்கி விட்டு யாரை ஏமாற்ற இந்த அறிவிப்பு?

நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்காத – மத்திய அரசுக்கு அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் வாங்க முடியாத அ.தி.மு.க அரசுக்கு நீட் தேர்வு பற்றி தேர்தல் அறிக்கையில் பேச தகுதியில்லை” என்று பேசினார்.

நீட் தேர்வை ஆதரித்து கையெழுத்திட்ட திமுக மட்டுமெ நீட் தேர்வு பற்றி தேர்தல் அறிக்கையில் பேச தகுதியுண்டா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Leave a Reply