மோடி பதவியேற்பை அடுத்து டெல்லியில் பலத்த பாதுகாப்பு!


இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறையாக இன்று நரேந்திர மோடி பதவியேற்கவுள்ளார். இந்த விழாவில் வெளிநாட்டு தலைவர்கள், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என சுமார் ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள டெல்லி வந்துள்ளனர். இதனையடுத்து பதவியேற்பு விழா நடைபெறும் டெல்லி முழுவதும் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு துணை ராணுவப் படை, அதி விரைவு படை, டெல்லி காவல்துறை என பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போர் வீரர்கள் நினைவிடம், ராஜ்காட் மற்றும் வாஜ்பாய் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தியப் பின் பிரதமர் மோடி பதவியேற்கவுள்ளதால், அந்தப் பகுதிகளில் இருக்கும் உயர்ந்த கட்டடங்களில் தொலைதூரத்தில் இருந்து குறி பார்த்து எதிரிகளை சுடும் ஸ்னைபர் துப்பாக்கிச் சூடு வீரர்களும் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அசம்பாவிதங்களை தவிர்க்க டெல்லி காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையில் இருந்து மட்டும் 10 ஆயிரம் பேர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருப்பதாக உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

Leave a Reply