shadow

மோடி எனது எண்ணங்களை புரிந்து கொண்டிருப்பார்: ராஜபக்சே

இலங்கையில் அரசியல் அசாதாரண சூழலை ஏற்பட்டுள்ள நிலையில் ‘இந்தியா டுடே’ டிவி சேனலுக்கு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டியில் அவர் கூறியது:

நான் சுமார் ஒன்றரை மாதங்கள் முன்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தேன். எனது எண்ணங்களை அவர் புரிந்து கொண்டிருப்பார் என்று நம்புகிறேன். தேர்தல் நடைபெற உள்ளது குறித்த அறிவிப்பு ஏற்கனவே அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது. எனவே இதை யாராலும் தடுக்க முடியாது.

19ஆவது சட்டத் திருத்தத்தின்படி தவறு என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. நீங்கள் ஒட்டுமொத்தமாக பிற சட்டப் பிரிவுகளையும் பார்க்க வேண்டும். இலங்கை அரசியல் சாசனத்தின்படி , அதிபரால் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலுக்கு அழைப்பு விடுக்க முடியும். எனவே இது ஜனநாயகத்திற்கு எதிரானது கிடையாது. இவ்வாறு ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

Leave a Reply