மோடிக்கு உலக நாடக தின வாழ்த்து தெரிவித்த ராகுல்காந்தி!

இன்று காலை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஒரு முக்கிய விஷயம் சொல்ல போவதாக அறிவித்திருந்தார். அதன்படி ‘மிஷன் சக்தி’ என்பது குறித்து விளக்கிய பிரதமர், அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை அடுத்து விண்வெளி துறையில் இந்தியா சாதனை புரிந்ததாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் மோடியின் மிஷன் சக்தி குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மோடிக்கு உலக நாடக தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக கூறினார்.

ராகுல்காந்தியின் இந்த கலாய்ப்பை பெரும்பாலான நெட்டிசன்கள் ரசித்து வருகின்றனர்.

Leave a Reply