shadow

மொபைல் எண்-ஆதார் எண்ணை இணைக்க 3 புதிய வழிகள்

கடந்த சில மாதங்களாகவே மொபைல் எண்களை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. வரும் 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதிக்குள் இந்த இணைப்பு முடியவேண்டும் என்ற கெடுவும் விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் மொபைல் எண்களை ஆதார் எண்ணுடன் இணைக்க அந்தந்த தொலைத்தொடர்பு சேவை அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய நிலை இருப்பதால் வாடிக்கையாளர்கள் இதனை அசெளகரியமாக நினைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் மொபைல் – ஆதார் எண்களை இணைக்க மூன்று புதிய நடைமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

1. ஒருமுறை பாஸ்வேர்டு என்ற முறை
2. ஆப் என்று கூறப்படும் செயலி முறை
3. ஐ.வி.ஆர்.எஸ் என்று கூறப்படும் குரல் பதிவுச்சேவை முறை

மேற்கண்ட மூன்று முறைகளில் வரும் டிசம்பர் 1ஆம்தேதி முதல் வாடிக்கையாளர்கள் தங்களுடைய மொபைல் எண்ணையும் ஆதார் எண்ணையும் இணைத்து கொள்ளலாம் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளது.

Leave a Reply