மே 17ஆம் தேதி வெளியாகும் பிரியா பவானிசங்கரின் ரிலீஸ்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான பிரியா பவானிசங்கர், எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து நடித்த ‘மான்ஸ்’ என்ற திரைபப்டம் மே 17ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை எஸ்.ஜே.சூர்யா தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.

சென்சாரில் யூ சான்றிதழ் பெற்றுள்ள இந்த படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் கோகுல் பினாய் ஒளிப்பதிவில், சபு ஜோசப் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ‘மாயா’, ‘மாநகரம்’ படங்களை தயாரித்த பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

பிரியா பவானிசங்கரின் ரசிகர்கள் இந்த தகவலால் உற்சாகம் அடிந்துள்ளார்கள்

Leave a Reply