மே மாத ரிலீஸ் பட்டியலில் இணைந்த அஞ்சலியின் ‘லிசா’

மே மாதம் கோடைவிடுமுறை மாதம் என்பதால் இந்த மாதத்தில் அதிக திரைப்படங்கள் வெளியாவதுண்டு. அந்த வகையில் மிஸ்டர் லோக்கல் உள்பட பல திரைப்படங்கள் இந்த மாதத்தில் வெளியாகவுள்ள நிலையில் தற்போது இந்த பட்டியலில் அஞ்சலியின் லிசா திரைப்படமும் இணைந்துள்ளது

அஞ்சலியின் ‘லிசா’ திரைப்படம் வரும் மே 24ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் புரமோஷனையும் படக்குழுவினர் ஆரம்பித்துவிட்டனர்.

ஏற்கனவே ‘பலூன்’ என்ற பேய்ப்படத்தில் நடித்துள்ள அஞ்சலி மீண்டும் நடித்துள்ள திகில் பேய்ப்படம் தான் இந்த லிசா. இந்த படத்தில் அஞ்சலி, மார்க்கண்ட் தேஷ்பாண்டே, யோகிபாபு, பிரம்மானந்தம், சாம் ஜோன்ஸ் சலீமா, உள்பட பலர் நடித்துள்ளனர்.

Leave a Reply