மெட்ரோ ரயிலில் இலவச ஹைஸ்பீடு வைஃபை வசதி: பயணிகள் மகிழ்ச்சி

டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இன்று முதல் ஹை ஸ்பீட் வைபை வசதி இலவசமாக வழங்கப்படும் என டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது. இதனால் டெல்லி மெட்ரோ ரயில் பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

மெட்ரோ வைஃபை நெட்வொர்க்கிங் மூலம் இந்த இலவச வை-பை நெட்வொர்க்கை டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்கள் வைபை கனெக்சன் பெற தங்கள் மொபைல் நம்பரில் இருந்து ஒரு ஓடிபி எண்ணை பெற வேண்டும் என்றும் அந்த ஓடிபி எண்ணை அவர்கள் சரியாக பதிவு செய்தால் அவர்களுக்கு உடனே இலவச ஹை ஸ்பீட் வைஃபை வசதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

22.7 கிலோ மீட்டர் பாதையில் பயணம் செல்லும் டெல்லி மெட்ரோ ரயில் பயணிகளுக்கு இந்த வைபை வசதி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதியால் டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இலவச வைபை இருப்பதால் பயணம் செய்துகொண்டே இன்டர்நெட்டில் தேவையான விவரங்களை பயணிகள் பெரும் வசதி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply