மூன்று கண்டங்களில் அஜித்தின் அடுத்த படம்!
ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா என மூன்று கண்டங்களில் அஜித்தின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது
தல அஜித் நடித்த ‘நேர் கொண்ட பார்வை’ படத்தை அடுத்து போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘தல 60’ திரைப்படம் மோட்டார் சைக்கிள் ரேஸ் குறித்த கதையம்சம் கொண்டதாம்.
இந்த படத்தில் ஹீரோ உலகின் பல நாடுகளுக்கு சென்று மோட்டார் சைக்கிள் ரேஸில் கலந்து கொள்வது போல் கதை அமைக்கப்பட்டுள்ளதாம். எனவே ஐரோபாவில் உள்ள புடாபெஸ்ட், ஆப்பிரிக்காவில் உள்ள தென்னாப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் உள்ள மத்திய கிழக்கு நாடுகள் என மூன்று கண்டங்களில் இந்த படம் நான்கு ஷெட்யூல்களில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாம்
Leave a Reply
You must be logged in to post a comment.