shadow

மு.க.ஸ்டாலினுக்கு பாஜக தலைவர் அமித்ஷா சவால்

திமுக-காங்கிரஸ் கூட்டணி பிரதமர் வேட்பாளரை அறிவிக்க முடியுமா? என ராமநாதபுரம் பாஜக பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா சவால் விடுத்துள்ளார்.

இன்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தமிழகத்தில் உள்ள ராமநாதபுரத்தில் நடைபெற்ற பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியபோது, ‘ரூ.12 லட்சம் கோடிக்கு ஊழல் செய்த திமுக-காங்கிரஸ் கூட்டணி தமிழகத்திற்கு நல்லது செய்ய முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றிக்காக போராட வேண்டும் என்றும், வெற்றிக்கான சபதத்தை ஏற்போம் என்றும் அமித்ஷா ஆவேசமாக பேசினார்.

மோடியை மீண்டும் பிரதமர் ஆக்க போர் நடந்து கொண்டு இருப்பதாகவும், தமிழகத்தில் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 35 எம்.பிக்கள் கிடைப்பார்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.

 

Leave a Reply