shadow

மு.க.அழகிரி திமுகவில் இணைக்கப்படுவாரா? கனிமொழி பதில்

அடுத்த கட்சியான அமமுகவில் இருந்த வந்த செந்தில்பாலாஜியை இணைத்து கொண்ட திமுக, சொந்த கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அழகிரியையும் விரைவில் இணைத்து கொள்ளும் என்றும், அழகிரி இணைப்பால் மதுரை உள்பட தென் தமிழகத்தில் திமுகவுக்கு சாதகமாக இருக்கும் என்றும் திமுக முன்னணி தலைவர்கள் கூறி வந்ததாக செய்திகள் வெளிவந்தது

இந்த நிலையில் அழகிரியை மீண்டும் திமுகவில் இணைப்பது தொடர்பாக மூத்த தலைவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்திற்கு பொறுப்பேற்று அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கனிமொழி எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

 

Leave a Reply