shadow

  3மும்பையில் வெர்சோவா – –காட்கோபர் ஆகிய இடங்களுக்கு இடையேயான மெட்ரோ ரயில் சேவை நேற்று முதல் தொடங்கியது. பொதுமக்கள் உற்சாகமாக மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர். இதனால் மும்பையின் போக்குவரத்து நெருக்கடி சிறிதளவு கட்டுப்படுத்தப்படும் என தெரிகிறது. மெட்ரோ ரயிலில் குறைந்தபட்சமாக கட்டணம் 10 ரூபாயும், அதிகபட்ச கட்டணமாக 40 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 

மும்பையில் மின்சார ரயிலில் ஏற்படும் நெருக்கடியை தவிர்க்க மெட்ரோ ரயில் திட்டம் கடந்த ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டது. இதற்கான வேலைகள் வெளிநாட்டு பொறியாளர்களின் உதவியால் மிகவேகமாக நடந்தது.

3bமும்பையில் வெர்சோவா – –காட்கோபர் இடையேயான 11.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் கடந்த 2006ஆம்ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக நடந்த சோதனை ஓட்டத்திற்கு பின்னர் நேற்று முதல் பயணிகளுக்காக மெட்ரோ ரயில்சேவை தொடங்கப்பட்டது.

மகாராஷ்டிர  முதல்வர் பிரித்விராஜ் சவான் மெட்ரோ ரயில் சேவைய நேற்று மிகச்சிறப்பாக நடந்த ஒருவிழாவில் தொடங்கி வைத்து, அதில் சிறிதுதூரம் பயணமும் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.. தினசரி காலை 5.30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

3aஇந்த ரயில்சேவை 4 நிமிடங்களுக்கு ஒரு ரயில் என துரிதமாக இயக்கபடுவதால் மும்பையில் மின்சார ரயிலில் ஏற்படும் நெருக்கடி பெருமளவு குறைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குளு குளு வசதியுடன் கூடிய 4 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த மெட்ரோ ரயிலில்  ஒரு பெட்டியில் 375 முதல் 400 பயணிகள் வரை பயணிக்கலாம். இதனால் ஒட்டுமொத்தமாக ஒரு ரயிலில் 1,500 பயணிகள் வரை பயணிக்க முடியும். தினமும் 11 லட்சம் பயணிகள் வரை பயணிக்க ஏதுவாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகிறது.

Leave a Reply