shadow

முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற இலங்கை

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் சற்றுமுன் வரை இலங்கை அணி 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் இந்தியாவை விட இலங்கை அணி 47 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 172 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இந்த நிலையில் முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் இலங்கை அணி 61.6 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்துள்ளது.

இன்று நான்காவது நாள் ஆட்டம் என்பதால் இந்த போட்டி டிராவில் முடியவே அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply