shadow

முதல்வருடன் ஸ்டாலின், அழகிரி திடீர் சந்திப்பு ஏன்?

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 11 நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் உடல்நலக்கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது

இந்த நிலையில் சிலநிமிடங்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை திமுக செயல் தலைவர் ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, முரசொலி செல்வம் ஆகியோர் கிரின்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தனர்.

இந்த சந்திப்பின்போது முக்கிய ஆலோசனை நடந்ததாக கூறப்படினும் வேறு எந்த தகவல்களும் வெளிவரவில்லை. கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக கருதப்படுகிறது

Leave a Reply