shadow

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புத் துறை டிஜிபி கந்தசாமி ஐபிஎஸ் அவர்கள் சற்றுமுன் சந்தித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களின் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு டிஜிபி யார் என்பது தொடர்பான கூட்டம் டெல்லியில் 28ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அது தொடர்பாகவும் விவாதிக்கப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது.