முதல்வருடன் நெல் ஜெயராமன் குடும்பத்தினர் சந்திப்பு

மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை நேற்று நெல் ஜெயராமன் அவர்களின் குடும்பத்தினர் சந்தித்தனர்.

நெல் ஜெயராமன் அவர்களின் விவசாய சேவை குறித்து தமிழக அரசின் 12ஆம் வகுப்பு தாவரவியல் பாடநூலில் பாடமாக இடம்பெற்றுள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த சந்திப்பு நடந்தது. நெல் ஜெயராமன் அவர்களை பாடப்புத்தகத்தில் பாடமாக்கி கௌரவித்தமைக்காக அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

Leave a Reply