shadow

முதல்முறையாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டம் பெற்ற ஒசாகா

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்று மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதி ஆட்டம் நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் ஜப்பானின் ஒசாகா, செக் குடியரசு நாட்டின் குவிட்டோவுடன் மோதினார். பரபரப்பாக நடைபெற்ற இந்த் ஆட்டத்தில் 7-5, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் ஒசாகா, குவிட்டோவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். ஒசாகா பெறும் முதல் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply