shadow

முதலமைச்சர் உடல்நிலை எப்படி உள்ளது? தலைவர்களின் தகவல்கள்

jayalalithaa02தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா காய்ச்சல் காரணமாக நேற்றிரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறி வரும் நிலையில் மருத்துவமனைக்குள் சென்று அந்த அதிமுக தலைவர்களின் என்ன சொன்னார்கள் என்பது குறித்து தற்போது பார்ப்போம்

வைகைசெல்வன்: முதலமைச்சர் பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்புவார்

சி.ஆர்.சரஸ்வதி: முதல்வர் ஆரோக்கியமாக உள்ளார். அவர் பூரண குணம் அடைந்துவிட்டார்

நாஞ்சில் சம்பத்: முதலமைச்சர் தற்போது நலமாக இருப்பதாக மருத்துவர்களிடம் இருந்து தகவல்கள் வந்துள்ளது.

மேலும் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் குணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று வருகிறது. மதுரை ஆதினம் முதல்வர் விரைவில் குணமாக சிறப்பு பூஜைகள் செய்து வருகிறார்.

Leave a Reply