shadow

முட்டை விலை கிடுகிடு உயர்வு? ரூ.10 வரை உயரும் என தகவல்

தமிழகத்தில் முட்டையின் சில்லறை விலை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் ரூ.4ஆக இருந்த நிலையில் தற்போது சில்லறை விலை ரூ.6ஆக விற்பனையாகி வருகிறது.

இந்த நிலையில் முட்டையின் விலை இன்று மேலும் 15 காசுகள் உயர்ந்துள்ளது. நாமக்கல்லில் முட்டை பண்ணை கொள்முதல் விலை நேற்று ரூ.4.59 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 15 காசுகள் உயர்ந்து ரூ.4.74 ஆக உள்ளது.

இதே ரீதியில் சென்றால் முட்டையின் சில்லறை விலை ரூ.10ஆக உயர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முட்டையின் விலை உயர்ந்தால் ஆம்லேட் உள்பட முட்டை சம்பந்தப்பட்ட உணவுப்பொருளின் விலையும் ஓட்டலில் உயர்ம் என கூறப்படுகிறது.

Leave a Reply