முடிவுக்கு வந்தது விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படம்

அர்ஜூன் ரெட்டி, நோட்டா போன்ற படங்களில் நடித்த பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா தற்போது ‘டியர் காம்ரேட்’ என்ற படத்தில் நடித்து கொண்டிருந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தை பரத்கம்மா இயக்கியுள்ளார். இந்த படத்தை மே 31ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதால் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த படம் தமிழிலும் டப் செய்து வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனா, கார்த்தி நடிக்கும் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கத்

Leave a Reply