முடிந்தது நேர்கொண்ட பார்வை! அடுத்த அஜித் படத்தின் படப்பிடிப்பு எப்போது?

எச்.வினோத் இயக்கத்தில் அஜித், வித்யாபாலன் நடித்த ‘நேர் கொண்ட பார்வை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் அஜித் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் படப்பிடிப்பும் மிக விரைவில் தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது.

அஜித்தின் அடுத்த படத்தையும் இயக்கவுள்ள எச்.வினோத், அந்த படத்தின் ஆரம்பகட்ட பணியை தொடங்கவிட்டதாகவும், ஒருபக்கம் ‘நேர் கொண்ட பார்வை’ தொழில்நுட்ப பணியையும் இன்னொரு பக்கம் ‘அஜித் 60 படத்தின் படப்பிடிப்பை நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது

போனிகபூர் தயாரிப்பில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள நேர் கொண்ட பார்வை படத்தில் அஜித், வித்யாபாலன், ஷராதா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடச்சலம், ஆண்ட்ரியா தரங், பிரகாஷ்ராஜ், மஹேஷ் மஞ்சுரேக்கர், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது

Leave a Reply