shadow

மீனாட்சி அம்மன் கோவிலுள் புகுந்த மழைநீர்: தூய்மை விருது வாங்கிய இரண்டு நாளில் அவலம்

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால், திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆகியவைகளுக்கு கிடைக்காத பெருமை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கிடைத்தது. அதுதான் இந்தியாவிலேயே தூய்மையான கோவில் என்ற விருது. இந்த விருதை மதுரை கலெக்டர் டெல்லி சென்று பெற்று வந்த இரண்டே நாட்களில் மழைநீர் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு புகுந்துள்ளது. இதனால் தூய்மை விருதுக்கு மீனாட்சி அம்மன் கோவில் உண்மையிலேயே தகுதிதானா? என்ற கேள்வி எழுந்துள்ளது

இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் சோலைக்கண்ணன், ” ‘தூய்மை’ பாரத இயக்க திட்டத்தின் கீழ், மதுரை மாநகராட்சியுடன் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனும் இணைந்து, மீனாட்சி அம்மன் கோயிலுக்கு 11 கோடி செலவில் தூய்மை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டதில், மத்திய அரசால் மீனாட்சி அம்மன் கோயிலுக்குத் தூய்மை விருது வழங்கப்பட்டு சில நாள்கள்கூட ஆகவில்லை. அதற்குள் நேற்று பெய்த மழையில் கோயிலுக்குள் மழைநீர் புகுந்துவிட்டது. மழைநீர் வெளியே செல்ல வழியில்லாமல் கோயிலுக்குள் சூழ்ந்ததால், பக்தர்கள் அவதிக்குள்ளானார்கள். இதற்காகவா 11 கோடி ரூபாய் செலவுசெய்தார்கள். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தங்கும் வசதி, உணவு உண்ண வசதி, கழிப்பறை வசதி, குளியலறை வசதி, உடை மாற்ற வசதி, மொட்டை போட வசதி, பார்க்கிங் வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, மருத்துவ வசதி போன்ற எந்த வசதியும் இல்லை. சித்திரை வீதிகளில் நாய்கள் தொல்லை. கோயில் பணியாளர்கள் கோயிலுக்குள்ளேயே அசுத்தம் செய்கின்றனர்.

பக்தர்களுக்கு எந்த ஒரு வசதியும் செய்துகொடுக்காத கோயில் நிர்வாகத்துக்கு, எதன் அடிப்படையில் மத்திய அரசு விருது வழங்கியது? ஒரு மழைக்கே மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் மழைநீர் புகுந்துவிட்டது. இதற்காகவா 11 கோடி ரூபாய் செலவுசெய்தார்கள். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்” என்றார்.

//www.youtube.com/watch?v=-V_yJR8LaFI&feature=youtu.be

 

Leave a Reply