விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் திரைப்படம் தியேட்டரில் தான் வெளியாகும் என்றும் ஓடிடியில் வெளியாகாது என்று அவ்வப்போது படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர்

ஆனால் இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கூறப்படுகிறது இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு லோகேஷ் கநகராஜ் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை அறிவிக்கவுள்ளார்

அவருடைய அடுத்த படத்திலும் விஜய் தான் நடிப்பார் என்று கூறப்படுகிறது. விஜய்யுடன் மீண்டும் ஒரு படத்தில் பணிபுரிய போகிறேன் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவிப்பார் என்றும் அதன் பின்னர் அடுத்த ஒரு சில மணி நேரத்தில் மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் ரிலீசாகும் என்று அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

விஜய் உடன் பணிபுரிந்த ஒரு படம் ஓடிடியில் ரிலீஸ் ஆனாலும் இன்னொரு படம் தியேட்டருக்காக நாங்கள் உருவாக்கப் போகிறோம் என்று விஜய் ரசிகர்களுக்கு சமாதானம் செய்வார் என்று கூறப்படுகிறது

Leave a Reply