மீண்டும் மகேஷ்பாபு படத்தின் ரீமேக்கில் விஜய்?

விஜய் நடித்த ‘கில்லி’ மற்றும் ‘போக்கிரி’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் மகேஷ்பாபு நடித்த படங்களின் ரீமேக் என்ற நிலையில் மகேஷ்பாபு நடித்து வரும் ‘மஹரிஷி’ படத்தின் ரீமேக்கிலும் விஜய் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளீவந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் விஜய் இனிமேல் ரீமேக் படங்களில் நடிப்பதில்லை என்ற முடிவை கடந்த சில வருடங்களுக்கு முன்பே எடுத்துவிட்டதால் இந்த படத்தில் அவர் நடிக்க வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது

மேலும் விஜய்யின் அடுத்த படத்தை அவரே தயாரிக்கவிருப்பதாகவும், அந்த படத்தை மோகன் ராஜா இயக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது

Leave a Reply