பிக்பாஸ் நிகழ்ச்சியில் 4வது சீசன் வரும் அக்டோபர் 10ம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன
ரம்யா பாண்டியன், சூர்யா தேவி, புகழ், கிரண் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
இந்த நிலையில் தற்போது ஒரு புதிய தகவலாக கடந்த சீசனில் தானாகவே வெளியேறிய நடிகர் கவின் மீண்டும் இந்த சீசனில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார் என்று தகவல் வெளிவந்துள்ளது
கடந்த சீசனில் நண்பர்களுக்காக விட்டு கொடுப்பதற்காக தானாகவே விலகினார் கவின் என்பது குறிப்பிடத்தக்கது இதனை கணக்கில் கொண்டு அவரை இந்த சீசனிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ளே அனுப்ப நிர்வாகக் குழுவினர் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன
Leave a Reply
You must be logged in to post a comment.