மீண்டும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் அஜித்-விஜய் படங்கள்

அஜித்தின் ‘வீரம்’ மற்றும் விஜய்யின் ‘ஜில்லா’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் கடந்த 2014ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியான நிலையில் 6 ஆண்டுகள் கழித்து அதாவது வரும் 2020ஆம் ஆண்டு அஜித், விஜய் நடித்த படங்கள் ஒரே நாளில் வெளியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது

அஜித் நடிக்கவுள்ள 59வது படத்தை எச்.வினோத் இயக்கவுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த படம் வரும் 2020ஆம் ஆண்டு மே மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

அதேபோல் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘விஜய் 64’ படமும் அதே மே மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. ஒரே நாளில் இரண்டு மாஸ் நடிகர்களின் படங்கள் வெளியானால் திரையுலகமே பரபரப்பில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply