மீண்டும் அதிமுகவில் இணைந்தார் கே.சி.பழனிசாமி:

அதிமுகவுக்கு சிம்மசொப்பனமாக தினகரனின் அமமுக இருக்கும் என கருதப்பட்ட நிலையில் அக்கட்சியில் இருந்து ஏற்கனவே செந்தில் பாலாஜி, கிணத்துக்கடவு தாமோதரன் ஆகியோர் விலகினர்.

இந்த நிலையில் பாஜகவை விமர்சனம் செய்ததால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிச்சாமி, அமமுகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அவர் மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தன்னை கட்சியில் இருந்து நீக்கியது செல்லாது என கே.சி.பழனிசாமி வழக்கு தொடுத்திருந்த நிலையில் தற்போது அவரை அதிமுக இணைத்துகொண்டதால் வழக்கை வாபஸ் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply