shadow

மிஷ்கின் இயக்கும் அடுத்த படத்தில் இளையராஜா

விஷால் நடித்த ‘துப்பறிவாளன்’ படத்தை இயக்கிய இயக்குனர் மிஷ்கின் தற்போது உதயநிதி நடிக்கவுள்ள ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் முதலில் சாந்தனு நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்த படத்தை தயாரிப்பதாக இருந்தவர் படத்தை கைவிட்டதால் தற்போது அதே படம் உதயநிதி தயாரிப்பில் உருவாகவுள்ளது.

மிஷ்கின் – சாந்தணு கூட்டணியில் உருவாகவுள்ள இந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். இந்த நிலையில், இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்டு இரண்டாம் வாரத்தில் தொடங்க இருக்கிறது.

இந்த நிலையில் உதயநிதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கண்ணே கலைமானே ‘ என்ற படம் விரைவில் ரிலீசாக உள்ளது

Leave a Reply