மிஷ்கின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

இயக்குனர் மிஷ்கின் படங்கள் இயக்குவது மட்டுமின்றி அவ்வப்போது மற்ற இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்து வரும் நிலையில் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கிய ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.

இந்த படம் ஜூன் 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் புரமோஷன் இன்று முதல் தொடங்குகிறது.

விக்ராந்த், அதுல்யாரவி, மிஷ்கின் சுசீந்திரன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.

Leave a Reply