மாற்று வேட்பாளராக மதிமுக போட்டியிடாதது ஏன்? வைகோ விளக்கம்

மாநிலங்களவை தேர்தலில் வைகோ போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் வைகோவுக்கு மாற்றாக திமுகவில் இருந்து என்.ஆர்.இளங்கோ என்பவர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில் மாற்று வேட்பாளராக மதிமுகவில் இருந்து யாரும் போட்டியிடாமல் திமுக போட்டியிட்டது ஏன் என்பதற்கு வைகோ விளக்கம் அளித்துள்ளார். நான் போட்டியிடுவதாக இருந்தால் மட்டுமே மாநிலங்களவை இடம் மதிமுகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே தான் மாற்று வேட்பாளரை ஏற்பாடு செய்யுமாறு ஸ்டாலினை நான் தான் கேட்டுக்கொண்டேன்

மேலும் நான் மாநிலங்களவைக்கு செல்லவேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம் என்றும், தேசதுரோக வழக்கில் தண்டிக்கப்பட்டது நான் மட்டும் தான் என்றும், 2 ஆண்டுக்கு மேல் தண்டனை பெற்றால் தான் போட்டியிட முடியாது என்றும் வைகோ
விளக்கம் அளித்துள்ளார்.

Leave a Reply