பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கித் துறை அதிகாரிகள் கூட்டமைப்பு மார்ச் மாதம் 15 மற்றும் 16 ஆம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிப்புச் செய்துள்ளனர்

சமீபத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன் அவர்கள் ஒரு சில பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க ஒப்புதல் அளித்திருந்தார். இந்த ஒப்புதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்த வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு இந்த முடிவை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து இம்மாதம் 15 மற்றும் 16 ஆகிய இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்

இதனால் அந்த இரண்டு நாட்களும் வங்கிகள் இயங்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது ஏற்கனவே இரண்டாவது சனிக்கிழமை மார்ச் 13 மற்றும் ஞாயிற்றுக் கிழமையான மார்ச் 14 ஆகிய இரண்டு நாட்களும் வங்கி விடுமுறை என்பதால் இந்த வேலைநிறுத்தம் காரணமாக தொடர்ச்சியாக 4 நாட்கள் வங்கிகள் இயங்காது என்ற நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply