திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து இரு கட்சி தலைவர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்

திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட்டு தற்போது அக்கட்சிக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

சற்று முன்னர் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதனை அடுத்து திமுக தொகுதி பங்கீடு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது

காங்கிரஸ் 25, மதிமுக 6, விடுதலை சிறுத்தைகள் கட்சி 6, சிபிஎம் 6, சிபிஐ 6, முஸ்லிம் லீக் 3, மனிதநேய மக்கள் கட்சி 2 என்று இதுவரை கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply