shadow

மாயமான பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொலை: சவுதி அரேபியாவுக்கு நெருக்கடி

அக்டோபர் மாதம் 2ஆம் தேதி மாயமானதாக கூறப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி என்பவர் துருக்கியில் உள்ள இஸ்தான்புல் துணை தூதரகத்தில் கொல்லப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சவுதி அரேபிய மன்னர் சல்மானின் ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்த வந்த ஜமால் கொல்லப்பட்டுள்ளதால் உலக நாடுகளின் குறிப்பாக அமெரிக்காவின் நெருக்கடிக்கு சவுதி அரேபியா ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் ஜமால் கொலைக்கும் சவுதி அரேபியாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சவுதி அரேபிய்டா மறுப்பு தெரிவித்துள்ளதோடு, ஜமால் கசோக்கி கொல்லப்பட்டதற்கு சவுதி அரேபியா அரசு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி சவுதி அரேபியாவால் கொலை செய்யப்பட்டிருந்தால், அந்த நாட்டின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரித்திருந்த நிலையில் தற்போது அவர் கொலை செயப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அமெரிக்காவின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற அச்சம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது

 

Leave a Reply