மாநிலங்களவை திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக தொமுச சண்முகம், வில்சன் ஆகியோர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக மாநிலங்களவை தேர்தலுக்கு இன்று முதல் வேட்புமனு தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் திமுக வேட்பாளர்களாக தொமுச சண்முகம், வில்சன் ஆகிய இருவரும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

திமுக சார்பில் மூன்று பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படும் நிலையில் இன்னொரு சீட், மதிமுகவுக்கு கொடுக்கப்படும் என தெரிகிறது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ போட்டியிட வாய்ப்பு உள்ளது

மாநிலங்களவை தேர்தல் ஜூலை 18ஆம் தேதி தேவைப்பட்டால் வாக்குப்பதிவு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply