மாஃபியா: திரைவிமர்சனம்
மாஸ் காட்டும் அருண்விஜய்-கார்த்திக் நரேன்

அருண்விஜய், பிரியா பவானி சங்கர், பிரசன்னா நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாபியா’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்

போதை மருந்து தடுப்பு பிரிவில் பணிபுரியும் அருண்விஜய், போதை மருந்து கும்பலை பிடிக்க தனது உதவியாளர் பிரியா மற்றும் ஒரு இளைஞருடன் களமிறங்குகிறார். கல்லூரி மாணவர்களிடம் போதை பழக்கத்தை இருப்பதை கண்டறிந்து அவர்களுக்கு போதை மருந்து சப்ளை செய்வது பிரசன்னாதான் என்பதையும் கண்டுபிடிக்கிறார். இருப்பினும் அவரை நெருங்க முடியாமல் இருக்கும் நிலையில் பிரசன்னாவை தன்னைத் தேடி வர வைக்க அருண்விஜய் திட்டம் போடுகிறார். ஆனால் எதிர்பாராதவிதமாக பிரசன்னா ஒரு அதிரடி காட்ட அருண்விஜய் நிலை குலைந்து போகிறார். அதன்பின்னர் பிரசன்னாவை தேடி செல்லும் அருண் விஜய்க்கு வெற்றி கிடைத்ததா? என்பதுதான் இந்த படத்தின் மீதி கதை

அருண்விஜய் போதை மருந்து தடுப்பு பிரிவு அதிகாரியாக நடித்துள்ளார். அவரது தோற்றம் மற்றும் மேக்கப் சூப்பராக இருந்தது. என்னை அறிந்தால், தடம், போன்ற படங்களுக்கு பிறகு நடிப்புக்கு அதிக வாய்ப்புள்ள படம் என்பதும் அதனை அருண்விஜய் கொஞ்சம் கூட மிஸ் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

பிரியா பவானி சங்கர் லேடி சூப்பர் ஸ்டார் போல் ஆக்ஷனிலும் அதிரடி காட்டுகிறார். இருப்பினும் அவரது காட்சிகள் சற்று செயற்கைத்தனமாக இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது

பிரசன்னா வில்லனாக அவதாரம் எடுத்து இருந்தாலும் இந்த படத்தில் அவருக்கு அதிகமாக பில்டப் மட்டுமே உள்ளனர். பில்டப்புக்கேற்ற வகையில் அவரது பாத்திரத்தில் வலிமை இல்லை என்பது ஒரு மைனஸ் தான்

இயக்குனர் கார்த்திக் நரேன் தனது வித்தியாசமான திரைக்கதையால் படத்தை முழுக்க முழுக்க சுவாரஸ்யமாக கொண்டு செல்கிறார். முதல் பாதியில் கொஞ்சம் தொய்வு இருந்தாலும் இரண்டாம் பாதியின் ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ் வரை விறுவிறுப்பான காட்சிகள் தான். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் அனைவரும் சீட்டின் நுனிக்கே வந்து விடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் இரண்டாம் பாகம் வரும் என்பதை சூசகமாக இயக்குனர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

கோகுல் பினாய் ஒளிப்பதிவு சூப்பர் அதேபோல் ஜாக்ஸ் பிஜாய் பின்னணி இசை மிக அருமை மொத்தத்தில் ஒரு ஆங்கிலப் படம் பார்ப்பது போல் ஸ்டைலிஸ் படமாக இருக்கிறது. முதல் பாதி மட்டும் கொஞ்சம் கவனத்துடன் எடுத்திருந்தால் இந்த படம் ஒரு ஹாலிவுட் படத்திற்கு இணையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது இருப்பினும் ஆக்சன் பிரியர்களை இந்த படம் ஏமாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply