மளிகைக்கடையில் மதுவிற்பனை: அரசின் அதிரடி அறிவிப்பு

ஜிஎஸ்டி வரி செலுத்தும் பெரிய மளிகைக் கடைகளில் மது விற்பனைக்கு அனுமதி தர ஜார்கண்ட் மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த மாநில கலால் வரித்துறை தயாரித்த திட்டத்துக்கு முதல்வர் ரகுபர் தாஸ் ஒப்புதல் அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் விரைவில் இந்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

கடந்த 2017-ம் ஆண்டு அரசே சொந்தமாக மதுக்கடைகளைத் திறந்து மது விற்பனை செய்தது. ஆனால், இதில் போதுமான அளவு வருமானம் கிடைக்கவில்லை. இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் செய்யப்பட்ட திருத்தத்தின்படி, மதுக்கடைகளைத் தனியாருக்கு ஏலத்தில் விற்பனை செய்ய திருத்தம் கொண்டு வந்தது.

மளிகைக் கடைகளில் மது விற்பனை செய்யும் இந்தத் திட்டத்தின்படி, மாநிலத்தில் ஜிஎஸ்டி வரி செலுத்தும் எந்த மளிகைக் கடையும், ரூ.30 லட்சம் வருவாய் உள்ள மளிகைக் கடையும் மது விற்பனை செய்துகொள்ள அரசு சார்பில் உரிமம் அளிக்கப்படும் என தெரிகிறது

Leave a Reply