மறைந்த ‘ஹேராம்’ பிரபலங்கள்: கமல்ஹாசன் டுவீட்
கமல்ஹாசன் நடித்து இயக்கிய ‘ஹேராம்’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகள் பூர்த்தியானததை அடுத்து இன்று காலை கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு டுவிட் இந்த 20 ஆண்டு கொண்டாட்டத்தை காண முடியாமல் மறைந்த இந்த படத்தின் பிரபலங்கள் குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
‘ஹேராம்’ பட தயாரிப்பாளர் சந்திரஹாசன் மற்றும் இந்த படத்தில் பணிபுரிந்த மனோகர் ஷாம் ஜோஷி, ஓம்புரி, மோஹன் கோக்லே, கிரிஷ் கர்னாட், வாலி, ஹெச்.ஸ்ரீதர், ரேணு சலூஜா, ஞானக்கூத்தன், விக்ரம் தர்மா போன்றவர்கள் இந்த இருபது ஆண்டு கொண்டாட்டத்தில் இல்லை என்று கமல்ஹாசன் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த படத்தில் பணிபுரிந்த ஷாருக்கான், ராணி முகர்ஜி, நஸ்ருதின் ஷா, ஹேமாமாலினி போன்றவர்கள் இல்லாமல் இந்த படம் இல்லை என்றும், இந்த படத்தில் பணிபுரிந்து ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் எனது நன்றிகள் என்றும் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.