மரியாதையாக மன்னிப்பு கேட்டு விடுங்கள்: திமுக எச்சரிக்கை!

முரசொலி விவகாரத்தில் அபாண்டமாக குற்றம் சாட்டிய பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தனுஷ் நடித்த அசுரன் படத்தை பார்த்த பின்னர் முகஸ்டாலின் அந்த படம் குறித்து கருத்து தெரிவித்த போது அதற்கு பதிலளித்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் முரசொலி கட்டடமே பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டதுதான் என தெரிவித்தார். இதனால் திமுக தரப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

டாக்டர் ராமதாஸ் தனது கருத்தை உடனடியாக வாபஸ் பெற்றுக் கொண்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் திமுக சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் நோட்டீஸ் அனுப்பி கடந்த சில வாரங்கள் ஆகியும் டாக்டர் ராமதாஸ் தரப்பில் இருந்து எந்த வித பதிலும் வராததை அடுத்து இன்று இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு ஜனவரி 20ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் சற்று முன்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி அவர்கள் டாக்டர் ராம்தாஸ் கூறிய அபாண்டமான குற்றச்சாட்டை எதிர்த்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் முரசொலி கட்டிடத்திற்கு உண்டான மூலப்பத்திரம் உள்பட அனைத்து ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்போது கூட ஒன்றும் குடி முழுகிப் போகவில்லை. டாக்டர் ராமதாஸ் அவர்கள் தனது தவறை திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அவர் முரசொலி நிலம் குறித்து கூறியது தவறானது என்று கூறி மன்னிப்புக் கேட்டால் அவர் மீது தொடரப்பட்டுள்ள வழக்கை வாபஸ் பெறுவோம்என்று கூறியுள்ளார். ஆர்எஸ் பாரதியின் இந்த எச்சரிக்கையை அடுத்து டாக்டர் ராமதாஸ் மன்னிப்பு கேட்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply