shadow

மயிலாப்பூர் மயில் சிலை மாற்றம் விவகாரம்: பெண் அதிகாரி கைது

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மயில் சிலை மாற்றத்தில் முறைகேடு நடபெற்றுள்ளதாக புகார்கள் எழுந்ததை அடுத்து இதுகுறித்து ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுமீது விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டது.

இதனையடுத்து பொன். மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தியதில் மயில் சிலை மாற்றப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதை உறுதி செய்தனர்.

இதனால் கோயில் துணை ஆணையரான திருமகள் என்பவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதனையடுத்து அவர் கடந்த 28 ந்தேதி முன்ஜாமின் கோரி மனுதாக்கல் செய்தார். ஆனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் அவர் தலைமறைவானர்.

இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகளை போலீசார் நேற்று கைது செய்து நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர்.

 

Leave a Reply