shadow

மதுபான தயாரிப்பில் கோலா நிறுவனம்

கடந்த பல ஆண்டுகளாக குளிர்பான தயாரிப்பில் ஈடுபட்டு வரும் கோலா நிறுவனம் முதல்முறையாக மதுபான தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்த மதுபானம் முதல்கட்டமாக ஜப்பானில் அறிமுகமாகவுள்ளது.

ஜப்பானில் அறிமுகமாகியுள்ள லெமன்-டோ என்ற இந்த மதுபானம் லேசான எலுமிச்சையின் சுவையைக் கொண்டிருக்கிறது. அதில் ஆல்கஹாலின் அளவு 3 முதல் 8 சதவீதம் வரை இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த குளிர்பானத்தை இளம் பெண்கள் அதிகம் விரும்புவார்கள் என்று அதை தயாரித்த நிறுவனம் கூறியுள்ளது.

பீருக்கு போட்டியாக இந்த பானத்தின் விற்பனை இருக்கும் எனவும், ஜப்பானுக்கு வெளியில் இந்தப் பானத்தை விற்க திட்டம் எதுவும் இல்லை எனவும் கோகோ-கோலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜப்பானில் 350 மில்லி லீட்டர் கேன் அளவில் கிடைக்கும் இதன் விலை 150 யென் (இந்திய மதிப்பில் 93 ரூபாய்). 125 ஆண்டுகளாக இயங்கி வரும் கோகோ-கோலா நிறுவனம் முதல் முறையாக மதுபான தயாரிப்பில் கால்பதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply