shadow

மண்பாண்டத்தில் இத்தனை மகத்துவமா?

மண்பாண்டப் பயன்பாடு உடலுக்கு நல்லது என எல்லோரும் சொல்லிக் கேட்டிருப்போம். எந்தெந்த வகைகளில் நல்லது?

* பனிக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகம் கலந்து இருக்கும். இதனால் நீர் ஆவியாவது குறைகிறது. எனவே, பானையில் இருக்கும் நீரும் குறைந்த அளவே குளிர்ச்சி அடைகிறது.

* மண்பாண்டங்கள் கழுவுவதற்கு எளிதானவை. எனவே எந்த ரசாயனப் பொருள்களைக் கொண்டும் கழுவ வேண்டாம். நம் உடலுக்குள் செல்லும் கெமிக்கல்களின் அளவு குறையும்.

* மண்பானையில் நிறைய நுண் துளைகள் இருக்கும். இதன் மூலம் நீராவி, உணவுக்குள் சீராக ஊடுருவுகிறது. இதனால் மண் பானைகளில் சமைக்கும் உணவு ஆவியில் வேக வைத்த உணவைப்போன்ற தன்மையைப் பெறுகிறது. இது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.

* சிறிய நுண் துளைகள் வழியே உள்ளிருக்கும் நீர் தொடர்ந்து ஆவியாகிக் கொண்டே இருக்கிறது. பானையின் வெப்பமும், பானையின் உள்ளே இருக்கும் நீரில் உள்ள வெப்பமும் தொடர்ந்து ஆவியாதல் மூலம் வெளியேற்றப்படுவதால் உள்ளிருக்கும் நீர் குளிர்ந்த நிலையிலேயே இருக்கிறது.

* ஃப்ரிட்ஜில் இருக்கும் நீர் பனிக்கட்டி ஆவது போல, பானையில் இருக்கும் நீர் ஆகாது.

* மண்பாண்டங்கள் உணவில் உள்ள அமிலத் தன்மையை சமன்படுத்தும் தன்மை கொண்டவை.

* மண்பாண்டச் சமையல் அதிக எண்ணெயைக் கோராது. இதுவும் உடல் ஆரோக்கியக்குத்துக்கு முக்கியக் காரணம்.

Leave a Reply