shadow

மக்களவையில் இன்று ஜிஎஸ்டி மசோதா மீது விவாதம்

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இன்று மக்களவையில் ஜிஎஸ்டி திருத்த மசோதா மீது விவாதம் நடைபெற உள்ளது.

நாடு முழுவதும் ஒரே சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பை அமல்படுத்தும் வகையில், மத்திய அரசு ஜிஎஸ்டி மசோதாவை கொண்டுவந்துள்ளது. ஏற்கனவே, கடந்த ஆண்டில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா, பல்வேறு திருத்தங்களுக்குப் பின், மீண்டும் இவ்வாரம் திங்கள்கிழமை மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது.

இதன்மீதான விவாதம் இன்று நடைபெற உள்ளது. ஜூலை 1ம் தேதி முதல் இதனை நடைமுறைப்படுத்த மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளதால், இன்றைய விவாதத்தில் பெரிய அளவில் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.

ஏற்கனவே, இதுதொடர்பாக, மாநில அரசுகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் கருத்தை கேட்டறிந்து, திருத்தங்கள் செய்துவிட்டதாக, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply