மகாராஷ்டிராவில் பயந்தது போலவே நடந்துவிட்டது: குடியரசு தலைவர் ஆட்சி?

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்து ஆளுநர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அரசியல் சாசனப்படி ஆட்சி அமைக்க முடியாத சூழல் நிலவுவதாக ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

குடியரசு தலைவர் இந்த பரிந்துரையை ஏற்று மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சியை ஆறு மாதங்களுக்கு அமல்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க பாஜக, சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தனித்தனியாக அம்மாநில ஆளுனர் வாய்ப்பு அளித்தார். ஆனால் இந்த வாய்ப்பை அரசியல் கட்சிகள் பயன்படுத்தி கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply