மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றம்: 2 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்த ஆக்சிஸ் பேங்க்

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பட்னாவிஸ் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்ற போதிலும், சிவசேனா கட்சி திடீரென காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்ததால் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தற்போது சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே அங்கு முதல்வராக பதவியேற்று ஆட்சி புரிந்து வருகிறார்

இந்த நிலையில் கடந்த பாஜக ஆட்சியில் பட்னாவிஸ் முதல்வராக இருந்தபோது இரண்டு லட்சம் காவல்துறை ஊழியர்களை ஆக்சிஸ் வங்கியில் சம்பள கணக்கு தொடங்க வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வங்கியின் முக்கிய பொறுப்பில் பட்னாவிஸ் மனைவி பணிபுரிந்து வந்ததால் காவல்துறையினர் ஆக்சிஸ் வங்கியில் வங்கிக் கணக்கைத் தொடங்க கட்டாயப்படுத்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின

இந்த நிலையில் தற்போது ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ஆக்சிஸ் வங்கியில் கணக்கு வைத்திருந்த இரண்டு லட்சம் கணக்குகளும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் ஒரே நாளில் ஆக்சிஸ் வங்கி இரண்டு லட்சம் வாடிக்கையாளர்களை இழந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply