shadow

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வானதி ஸ்ரீனிவாசன் என்பது தெரிந்ததே

இவருடைய மகன் ஆதர்ஷ் நேற்று கார் விபத்தில் சிக்கியதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த கார் விபத்து குறித்து வானதி ஸ்ரீனிவாசன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது

எனது மூத்த மகன் ஆதர்ஷ் ஓட்டி வந்த வாகனம் நேற்றிரவு எதிர்பாராத விதமாக விபத்துக்கு உள்ளானது. இறைவன் அருளால் எந்தவித காயங்களும் இல்லாமல் அவர் நலமாக உள்ளார். அக்கறையோடு ,அன்போடு விசாரித்த நல் உள்ளங்களுக்கு நன்றி