shadow

மகத் ஹீரோவாக நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் மகத். கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ‘வல்லவன்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் முதல் முதலாக பிரபுராம் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார் மகத். இப்படத்திற்கு ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இன்று இப்படத்தின் பிரஸ்ட் லுக் டுவிட்டர் பக்கத்தில் வெளியானது.

மேலும் இப்படத்தில் சிம்புவும் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தை பற்றிய பிற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply