shadow

ப்ராங்கி ரோல்

3
என்னென்ன தேவை?

வெங்காயம், தக்காளி – தலா ஒன்று

கேரட் துருவல் – 4 டேபிள் ஸ்பூன்

பச்சைப் பட்டாணி – 5 டேபில் ஸ்பூன்

நறுக்கிய குடைமிளகாய் – 2 டேபிள் ஸ்பூன்

முட்டைகோஸ் துருவல் – 3 டேபிள் ஸ்பூன்

சுரைக்காய்த் துருவல் – அரை கப்

மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை

காஷ்மீரி மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன்

கோதுமை மாவு – ஒரு கப்

மைதா மாவு – கால் கப்

சோள மாவு – 2 டேபிள் ஸ்பூன்

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்குங்கள். பிறகு முட்டைகோஸ், கேரட், சுரைக்காய், குடைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்குங்கள். வதங்கியதும் வேகவைத்த பச்சைப் பட்டாணி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலா சேர்த்து வதக்குங்கள்.கோதுமை மாவு, மைதா மாவு, தேவையான அளவு உப்பு இவற்றுடன் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையுங்கள்.

பிசைந்த மாவை 20 நிமிடம் ஊறவையுங்கள். பிறகு சப்பாத்தியாக இட்டு, தோசைக்கல்லில் போட்டு எடுங்கள். சப்பாத்தியினுள் 4 டீஸ்பூன் மசாலாவை வைத்துச் சுருட்டுங்கள். சோள மாவைத் தண்ணீர் சேர்த்துக் குழைத்து, சப்பாத்தியின் ஓரங்களை மூடிவிடுங்கள். இதை மீண்டும் தோசைக்கல்லில் போட்டு இரு முனைகளிலும் எண்ணெய் விட்டு, வேகவைத்து எடுங்கள். சுரைக்காயைக் கண்டாலே ஓடிப் போகும் குழந்தைகளும் இந்த ரோல்ஸை விரும்பிச் சாப்பிடுவார்கள்.

Leave a Reply